நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட கூட்டுறவு மற்றும் மண்டல ஊரக வங்கிகள், இணையதளங்கள் ரேன்சம்வேர் தாக்குதலால் சேவை பாதிப்பு

0 481

நாடு முழுவதும் 300-க்கும் மேற்பட்ட கூட்டுறவு மற்றும் மண்டல ஊரக வங்கிகள், இணையதளங்கள் ரேன்சம்வேர் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிறிய வங்கிகளுக்கு தொழில்நுட்ப அமைப்புகளை வழங்கும் சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் என்ற மென்பொருள் நிறுவனம் இந்த தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம், சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் மென்பொருள், சில்லறை கட்டண முறையை தற்காலிகமாக அணுக முடியவில்லை எனத் தெரிவித்துள்ளது.

சி-எட்ஜ் மூலம் சேவை பெறும் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தற்காலிகமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை விரைந்து சரிசெய்யப்படும் என்று என்பிசிஐ தெரிவித்துள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை சிறிய வங்கிகள் என்பதால் நாட்டின் பரிவர்த்தனைகளில் வெறும் 0.5 சதவீதம் அளவுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

ரேன்சம்வேர் என்பது இணையம் வழியாக கணினிகளில் நுழைந்து ஹேக் செய்யக்கூடியதாகும். ஹேக்கர்கள் இந்த ரேன்சம்வேரை பயன்படுத்தி பெருநிறுவனங்களின் கணினிகளை ஹேக் செய்து அந்த நிறுவனங்களிடம் இருந்து பெரும் தொகையை கேட்பதால் இந்த வைரஸுக்கு ரேன்சம்வேர் என்று பெயர் வந்தது.

2017ல் ஒரே நாளில் 150 நாடுகளில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கணினிகளை ரேன்சம்வேர் வைரஸ் முடக்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments