ஹனியே படுகொலைக்கு ரஷ்யா, சீனா, துருக்கி, கத்தார் கண்டனம்... மத்திய கிழக்கில் மேலும் போர் பதற்றம் அதிகரிப்பு
ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் படுகொலை செய்யப்பட்டதற்கு ரஷ்யா, சீனா, துருக்கி, கத்தார், மலேசியா போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இஸ்ரேலை கண்டித்து ஈரான், பாகிஸ்தான், லெபனான், துருக்கி போன்ற நாடுகளில் பேரணிகள் நடைபெற்றன.
இஸ்மாயில் ஹனியே-வை தீர்த்துக்கட்டிவிட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட இஸ்ரேல் அரசு செய்தித்துறை, பின்னர் அந்த பதிவை நீக்கிவிட்டது. இஸ்ரேலுக்கு தக்கப்பாடம் புகட்டப்போவதாக ஈரான் அரசும், ஹெஸ்பொல்லா, ஹவுதி போன்ற ஈரான் ஆதரவு போராளி குழுக்களும் சூளுரைத்துள்ளதால், மத்திய கிழக்கில் மேலும் போர் பதற்றம் அதிகரித்து காஸா போர் நிறுத்த பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகி உள்ளது.
Comments