திருவேற்காட்டில் 100 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம்

0 631

சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே, அயனம்பாக்கத்தைச் சேர்ந்த  இன்ஜினியர் ஜனார்த்தனம் என்பவர் வீட்டில், பூட்டை உடைக்காமலே பீரோவில் இருந்த  100 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

வீட்டில் இருந்த 40 பவுன் நகைகளை மனைவிக்கு தெரியாமல் விற்று ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்ததை மறைக்க ஜனார்த்தனமே உறவினரான தியாகராஜன் மூலம் திட்டமிட்டு நகைகள் கொள்ளை போனதாக நாடகமாடியது தெரியவந்துள்ளது.

குடும்பத்துடன் வீட்டைவிட்டு வெளியே சென்றபோது, வீட்டின் மற்றொரு சாவியை தியாகராஜனிடம் ஜனார்த்தனம் கொடுத்து நகைகளை எடுத்துச் சென்று வைத்திருந்ததை கண்டுபிடித்ததாக போலீசார் கூறினர்.  தியாகராஜன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 60 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments