பஞ்சர் கடையில் ஏர் கம்பிரஷர் வெடித்து விபத்து.. கால் சிதைந்த நிலையில் விவசாயி மருத்துவமனையில் அனுமதி..!

0 467

ஓசூர் அருகே பஞ்சர் கடையில் காற்று நிரப்பும் கம்பிரஷர் எந்திரம் வெடித்து விவசாயி ஒருவரின் கால் முற்றிலும் சிதைந்த நிலையில் பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தண்டரை கிராமத்தை சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் தனது இருசக்கர வாகனத்திற்கு ஆயில் மாற்ற தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பஞ்சர் கடைக்கு சென்றபோது விபத்து நேரிட்டது.

ஏர் கம்பிரஷர் அதிக அழுத்தம் காரணமாக வெடித்து அதன் தகடு மஞ்சுநாத் காலில் பட்டதில் வலது கால் முற்றிலும் சிதைந்தும் இடது கால் பலத்த காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments