ஒலிம்பிக்கில் வெண்கலம் பதக்கம் வென்ற அமெரிக்க நீச்சல் வீரர் ரியான் மர்பி

0 580

அமெரிக்க நீச்சல் வீரர் ரியான் மர்பி பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற நிலையில், பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த அவரது மனைவி, தங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்து அவரை மேலும் மகிழ்ச்சிக்குள்ளாக்கினார்.

பாலினம் தொடர்பான பதாகையை அவரது மனைவி கோண்டினன் உயர்த்தி பிடித்திருக்கும் புகைப்படத்தை அமெரிக்க நீச்சல் அணி பதிவிட்டுள்ளது.  எந்தப் பதக்கத்தையும் விட இது மிகப் பெரியது என்று  ரியான் மர்பிக்கு பல்வேறு நீச்சல் ஜாம்பவான்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments