டெல்லியில் வெள்ள நீர் புகுந்த விவகாரம்... ஐஏஎஸ் பயற்சி மைய மாணவர்கள் 10 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம்

0 482

டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மைய மாணவர்கள் 10 பேர் இரண்டாவது நாளாக தங்களது காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர்.

கடந்த 27ஆம் தேதி, டெல்லியின் பழைய ராஜீந்தர் நகரில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் கீழடித் தளத்தில் வெள்ள நீர் புகுந்ததில் 2 மாணவிகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி 400-க்கும் அதிகமான மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும், தரையடித் தளத்தை நூலகமாகவோ வகுப்புகள் எடுக்கவோ பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 10 மாணவர்கள் நேற்று முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments