சென்னை மாநகராட்சியில் தொழில் வரியை 35 சதவீதம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றம்

0 429

சென்னை மாநகராட்சியில் தொழில் வரியை 35 சதவீதம் உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.தமிழக அரசு ஒப்புதல் கொடுத்தவுடன் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாத வருமானம் 21 ஆயிரம் ரூபாய்குள் உள்ள நபர்களுக்கு வரி உயர்வு இல்லை, 21 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் உள்ள நபர்களுக்கு வரி 135 ரூபாயிலிருந்து 180 ரூபாயாகவும், 30 ஆயிரம் ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் உள்ள நபர்களுக்கு 315 ரூபாயில் இருந்து 430 ரூபாயாகவும், 45 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை உள்ள நபர்களுக்கு 690 ரூபாயாக இருந்த வரி 930 ரூபாயாக உயர்த்திட தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments