போலி கையெழுத்து - ஏ.கே. பில்டர்ஸ் நிறுவனம் மீது ஐ.ஏ.எஸ். அதிகாரி அழகு மீனா புகார்
முறையில்லாமல் கட்டிய கட்டடத்திற்கு, தனது கையெழுத்தை போலியாக போட்டு தடையில்லா சான்றிதழை வாங்கியதாக தாம்பரம் மாநகராட்சி முன்னாள் ஆணையாளரும், தற்போது கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராகவும் உள்ள அழகுமீனா ஏ.கே. பில்டர்ஸ் நிறுவனம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சேலையூர் புத்தன் தெருவில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடம் முறையான திட்ட அனுமதியின்றி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
முறையாக கட்டப்படாத கட்டத்திற்கு எவ்வாறு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது என கோபால் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு பெற்ற தகவலில் மாநகராட்சி சார்பில் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அவர் விசாரித்தபோது போலி கையெழுத்து விவகாரம் தெரியவந்த நிலையில், தாம்பரம் மாநகராட்சியில் தொடர்புடைய ஒருவர் தடையில்லா சான்று வாங்கி கொடுத்தார் என நிறுவன மேலாளர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Comments