கோவை மாவட்டத்தில் கனமழைக்கு 3 பேர் உயிரிழப்பு என தகவல்
கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையால் இரு வெவ்வேறு இடங்களில் வீடு இடிந்து 3 பேர் உயிரிழந்தனர். மழை காரணமாக வால்பாறை அருகே சோலையாற்றின் இடது கரையின் ஒருபகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டது.
கரை மண் சரிந்து வீடு ஒன்றின் மீது விழுந்ததால் சுவர் இடிந்து வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த முத்து அவரது பெயர்த்தி ஜெனா ஆகியோர் மீது விழுந்ததில் அவர்கள் நசுங்கி உயிரிழந்தனர்.
இதேப்போன்று, திப்பம்பட்டியில் வீடு இடிந்து விழுந்ததில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த ஹரிஹரசுதன் என்ற இளைஞர் உயிரிழந்தார்.
Comments