மாநில அளவிலான ஆணழகன் போட்டி... கன்னியாகுமரியைச் சேர்ந்த மரியஜீஸோக்கு முதல் பரிசு
செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில், தமிழ்நாடு அமெச்சூர் ஆணழகன் சங்கமும், செங்கை மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்கமும் இணைந்து மாநில அளவிலான ஆணழகன் போட்டியை நடத்தின. தமிழகம் முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த மரியஜீஸோ முதல் பரிசும், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்டரசன் இரண்டாவது பரிசும், புதுச்சேரியைச் சேர்ந்த பிரகாஷ் மூன்றாவது பரிசும் பெற்றனர்.
Comments