உச்ச நீதிமன்ற உத்தரவால் கலவரங்களை கட்டுப்படுத்த இணைய சேவைகளை துண்டித்த வங்கதேச அரசு

0 521

வங்கதேசத்தில், 10 நாட்களாக செல்போன்களுக்கான இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், கலவரங்கள் அடங்கியதால் மீண்டும் இணைய சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் வழங்கப்படும் 30 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தி வெடித்த போராட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்திகள் பரப்பப்படுவதாகவும், போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்படுவதாகவும் கருதிய வங்கதேச அரசு, கடந்த 18-ஆம் தேதி இணைய சேவைகளை துண்டித்தது. இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அங்கு இயல்பு நிலை திரும்பியதால் மீண்டும் இணைய சேவைகளை வழங்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments