ரூ.70 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட நகை வியாபாரியின் மகன்கள் அதிரடியாகக் களமிறங்கி ஆட்டத்தைக் கலைத்த போலீசார் ரௌடிகளுடன் கைதாகி கம்பி எண்ணும் வியாபாரி!
திருவண்ணாமலையில் 70 லட்சம் ரூபாய் பணம் கேட்டு காரில் கடத்திச் செல்லப்பட்ட நகைக்கடை அதிபரின் 2 மகன்களை பெங்களூரு செல்லும் வழியில் போலீசார் மீட்டனர். சூதாட்டத்தில் பணம், நகையை இழந்த மற்றொரு நகை வியாபாரி பெங்களூருவிலிருந்து ஆட்களை ஏற்பாடு செய்து கடத்த முயன்று போலீசில் சிக்கியுள்ளார்.
திருவண்ணாமலை அசலியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயின் ஜூவல்லரி அதிபரின் மகன்கள் இருவரையும் கடத்தி
திருவண்ணாமலை அசலியம்மன் கோவில் தெருவில் இயங்கி வரும் ஜெயின் ஜூவல்லரி நகைக்கடை வியாபாரி நரேந்திரகுமாரின் மகன்கள் ஜித்தேஷ், ஹரிஹந்த் ஆகிய இருவரையும் அதே பகுதியில் நகை கடை வைத்துள்ள ஹன்ஸ்ராஜ் என்பவர் பெங்களூரில் இருந்து கூலிப்படையை வைத்து கடத்தி , நரேந்திரகுமாரிடம் 70 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார்.
முதற்கட்டமாக 10 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்ட ஹன்ஸ்ராஜ் நரேந்திரகுமாரிடம் மேலும் 60 லட்சம் கேட்டுள்ளார். கடத்தல் கும்பலுக்கும் நகைக்கடை உரிமையாளர் நரேந்திரகுமாருக்கும் இடைத்தரகராக ஹன்ஸ்ராஜ் செயல்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சுதாரித்துக் கொண்ட திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் அதிரடியாக செயல்பட்டு பெங்களூருவுக்குக் கடத்திச் செல்லப்பட்ட ஜித்தேஷ், ஹரிஹந்த்தையும் மேல் செங்கம் சுங்கச்சாவடி அருகே மீட்டுள்ளனர். மேல்செங்கம் சுங்கச்சாவடி அருகே சந்தேகப்படும்படியாக வந்த காரை மடக்கி பிடித்து இருவரையும் மீட்டுள்ளனர்.
நகைக்கடை அதிபர் ஹன்ஸ்ராஜ், பெங்களூரு ரவுடி கும்பலைச் சேர்ந்த பில்லா, பிரவீன், சீனு, முயல் என்கின்ற ராஜ்குமார் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, ஒரு கார் மற்றும் 9 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இந்த கடத்தலில் தொடர்புடை 6 நபர்களை, தனிப்படை அமைத்து திருவண்ணாமலை போலீசார் தேடி வருகின்றனர்.
கடத்தில் ஈடுபட்டு கைதான 5 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து திருவண்ணாமலை போலீசார் விசாரணை மேற்கொண்டர். அப்போது, தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, நரேந்திரகுமாரின் மகன்களை கடத்தி, பணம் பறிக்கத் திட்டமிட்டதை ஹன்ஸ்ராஜ் ஒப்புக் கொண்டதாக, போலீசார் தெரிவித்தனர்.
நகை, பணம் உள்ளிட்டவற்றை வைத்து சூதாட்டமாடி நஷ்டமடைந்து, விரக்தியடைந்த ஹன்ஸ்ராஜ் பெங்களூருவை சேர்ந்த பிரபல ரவுடி பில்லா, விக்ரம், மனோ என்கிற கபாலி, வாசிம் ஆகியோரை வைத்து கடத்தலை அரங்கேற்றியுள்ளார். சனிக்கிழமை இரவு 10.53 மணி அளவில் ஜித்தேஷும் ஹரிஹந்த்தும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது திருவண்ணாமலை ராமலிங்கனார் தெரு அருகே வழிமறித்து, அடித்து தாக்கி கார் மூலம் மின்னல் வேகத்தில் கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தி பணம் பறிக்க முயன்று கைதான ஜூவல்லரி அதிபர் ஹன்ஸ்ராஜ், பெங்களூரு ரவுடிகள் 4 பேரிடம் திருவண்ணாமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments