அமெரிக்க உதவியுடன் 31 அதிநவீன MQ 98 ஆளில்லா விமானங்கள்... இந்தியா-அமெரிக்கா இடையே கையெழுத்து
இந்தியாவிலேயே ஆளில்லாத விமானங்கள் மற்றும் அதி நவீனமான 31 டிரோன்களை 3 பில்லியன் டாலர் செலவில் தயாரிக்க அமெரிக்கா தொழில்நுட்ப ஆலோசனை வழங்க முன்வந்துள்ளது. இது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்த நிலையில் இந்தியா அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மொத்தம் 31 ஆளில்லா விமானங்களில், இந்திய கடற்படைக்கு 15ம், ராணுவத்திற்கும் விமானப்படைக்கும் தலா 8 டிரோன்கள் வழங்கப்பட உள்ளன.
சென்னை மற்றும் குஜராத்தின் போர்பந்தர் அருகே நிறுத்தப்பட்டுள்ள போர்க்கப்பல்களில் இந்த ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆலோசனையால் ஆளில்லா விமான தயாரிப்புக்கான காலம் குறையும் என்றும் கூறப்படுகிறது.
Comments