புதுச்சேரி பகுதியில் கடலூர் அ.தி.மு.க பிரமுகர் படுகொலை...

0 500

பழிக்குப் பழியாக கடலூர் அ.தி.மு.க பிரமுகர் புதுச்சேரி பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டதாக கடலூர் போலீஸார் தெரிவித்தனர்.

அ.தி.மு.க வார்டு செயலாளரான கடலூர் நவநீதம் நகரைச் சேர்ந்த பக்தா என்ற பத்மநாபன் உறவினர் வீட்டிற்குச் சென்று விட்டு டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது கொலை செய்யப்பட்டார்.

புதுவை மாநில எல்லை பகுதியான திருப்பனாம் பாக்கத்தில் அவர் வந்த போது காரில் வந்த கும்பல் ஒன்று டூவீலர் மீது மோதச் செய்ததாகவும், நிலை தடுமாறி கீழே விழுந்தவரை அந்த கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

அவருடன் வந்த ரங்கா என்பவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு நவநீதம் நகரைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் கொலை வழக்கில் பத்மநாபன் கைது செய்யப்பட்டவர் என்று போலீஸார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments