இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதி மீது ஹெஸ்பொல்லா தாக்குதல் - 10 முதல் 20 வயதுக்கு உட்பட்டோர் 12 பேர் பலி
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியான கோலன் குன்றுகளில் உள்ள கால்பந்து மைதானம் மீது ஹெஸ்பொல்லா போராளிகள் வீசிய ராக்கெட் விழுந்து வெடித்ததில் சிறுவர்கள் உள்பட 12 பேர் பலியானதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
1967-ஆம் ஆண்டு, அரபு நாடுகள் உடன் நடந்த யுத்தத்தின்போது, சிரியாவுக்கு சொந்தமான கோலன் குன்றுகளை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது. இஸ்ரேலியர்கள், அரேபியர்கள் என சுமார் 40 ஆயிரம் பேர் அங்கு வசித்து வருகின்றனர்.
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 4 போராளிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடி தரும் விதமாக ஹெஸ்பொல்லா போராளிகள் 30 ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் ஒன்று கால்பந்து மைதானத்தில் விழுந்து வெடித்தத்தில் அங்கு விளையாடிக்கொண்டிருந்த 12 பேர் இறந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Comments