ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு வள்ளி கும்மி நடனம் - சீருடை அணிந்து ஆடவர், மகளிர் ஆடிய பாரம்பரிய நடனம்
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் வட்டமலை ஆண்டவர் கலைக்குழு சார்பில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கலந்து கொண்ட வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி மதிப்பாபுரி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
சீருடை அணிந்தபடி ஆண்களும், பெண்களும், சிறுமியர்களும் வள்ளிக் கும்மி ஆட்டம் ஆடியது காண்போர் கண்களை கவர்ந்தது. அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் விதமாக வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி நடைபெற்று வருவதாக கலைக் குழுவினர் தெரிவித்தனர்.
இதே போன்று ஓமலூர் அருகே மயிலம்பட்டி அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கரிய பெருமாள் திருக்கோயில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் வள்ளி கும்மி நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டு இசைக்கு ஏற்றாற் போல் தங்களது உடலை அசைத்து நடனமாடி அசத்தினர்.
Comments