நீதிபதிகள் நியமனம் குறித்து மாநிலங்களைவையில் தி.மு.க எம்.பிக்கு சட்டத்துறை அமைச்சர் பதில்
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என தி.மு.க எம்.பி வில்சன் மாநிலங்களவையில் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், அரசியல் அமைப்பு சட்டத்தின் படி நடக்கும் நீதிபதிகள் நியமனத்தில் எந்த இடஒதுக்கீட்டு முறையும் பின்பற்றப்படுவதில்லை என்று தெரிவித்தார்.
நீதிபதிகளின் பெயர்களை கொலிஜியம் பரிந்துரைக்கிறது, அரசு அவர்களை நியமிப்பதாக கூறிய அவர், 2018 முதல் 2024 வரை நியமிக்கப்பட்ட 661 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 21 பேர் எஸ்.சி, 12 பேர் எஸ்.டி, 78 பேர் ஓ.பி.சி மற்றும் 499 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், நீதிபதி தேர்வுகளுக்கான பரிந்துரைகளை அனுப்பும்போது சிறுபான்மையினர், எஸ்.சி, எஸ்.டி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களை அனுப்புமாறு உயர்நீதிமன்றங்களை மத்திய சட்டத்துறை வலியுறுத்திவருவதாகவும் கூறினார்.
Comments