தரும்புரில் புதிதாகத் திறக்கப்பட்ட பிரியாணி உணவகத்தில் ஊழியர் கத்தியால் குத்திக் கொலை

0 569

தருமபுரி இலக்கியம்பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் கிரில் மாஸ்டராக வி ஜெட்டி அள்ளியை சேர்ந்த 25 வயதான முகமது ஆசிக் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்றிரவு 10 மணியளவில் ஓட்டலில் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு 4 பேர் வந்துள்ளனர்.

அவர்களில் 2 பேர் முகமது ஆசிக்கிடம் பேசுவது போல் பாசாங்கு காட்டி கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தியதாக கூறப்படுகிறது.

அவர்களைத் தடுக்க முற்பட்டபோது தங்களிடமும் கத்தியை காட்டி மிரட்டியதால் அதிர்ச்சி அடைந்து விலகி நின்றதாகவும் கத்தியால் குத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாகவும் ஓட்டல் ஊழியர்கள் தெரிவித்தனர்.

படுகாயம் அடைந்த முகமது ஆசிப் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர போலீசார் முகமது ஆசிக்கை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முகமது ஆசிக் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments