பாம்பன் புதிய ரயில் பாலத்தில் பொருத்தப்பட்ட செங்குத்துப்பாலம்... ரயில்வே கட்டுமான ஊழியயர்கள் வாண வேடிக்கையுடன் கொண்டாட்டம்
பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மைய பகுதியில் செங்குத்து பாலம் பொருத்தப்பட்டதை ரயில்வே கட்டுமான ஊழியயர்கள் வாண வேடிக்கையுடன் கொண்டாடினர்.
பாம்பன் கடலில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கிய புதிய பாலம் அமைக்கும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
200 டன் எடை கொண்ட இரும்பு செங்குத்து தூக்கு பாலம் ரயில் பால முகப்பு பகுதியில் இருந்து, கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மெல்ல மெல்ல நகர்த்தி மையப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு பொருத்தப்பட்டது.
அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பாம்பன் புதிய பாலம் வழியாக ரயில் சேவை தொடங்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
Comments