பாரிசில் வண்ணமயமாக தொடங்கியது ஒலிம்பிக் திருவிழா.. ஒளி வெள்ளத்தில் ஜொலித்த ஈபிள் கோபுரம்

0 694

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் போட்டிகளின் கண்கவர் தொடக்க விழா நடைபெற்றது. சீன் ஆற்றின் இருகரைகளிலும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு உலகின் மிகப் பிரபலமான விளையாட்டு திருவிழாவை வரவேற்றனர்.

பிரான்சில் ஒலிம்பிக் போட்டி மறக்க முடியாத அனுபவத்தை அனைவருக்கும் அளிக்கும் என உறுதி அளிப்பதாக அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்தார். ஒலிம்பிக் போட்டி தொடங்கியதைக் குறிக்கும் வகையில் ஈபிள் கோபுரம் பலவண்ணங்களில் ஒளிரவிடப்பட்டது

சீன் ஆற்றில் படகுகளில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஊர்வலமாக செல்ல, இருகரைகளில் இருந்தும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் அதை கண்டு ரசித்தனர்.

இந்தியா சார்பில் வீராங்கனை பி.வி.சிந்துவும் தமிழகத்தைச் சேர்ந்த வீரரான சரத் கமலும் இந்தியக் கொடியை ஏந்தி அணிவகுப்பில் பங்கேற்றனர்

பிரபல பாப் பாடகி லேடி காகாவின் (LADY GAGA) இசை நிகழ்ச்சி உள்பட சர்வதேச நட்சத்திரங்கள், ஒலிம்பிக் தொடக்க விழாவில் பங்கேற்றனர்.

ஒலிம்பிக் தொடக்க விழா கொண்டாட்டத்தின் இடையே பாரிசில் மழை பெய்ததால் குடைகளுடன் ரசிகர்கள் பங்கேற்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments