பிறந்த நாள் கொண்டாடிய கையோடு இளைஞர் தற்கொலை? நிதி நிறுவன மோசடியில் சிக்கி கடனாளி ஆன இளைஞர்....

0 564

குமரி மாவட்டம் குளச்சல் அருகே, மனைவியுடன் சேர்ந்து 31-வது பிறந்த நாளை கொண்டாடியவர்,  பின் மனைவியின் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுவது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

தையலகம் நடத்திவரும் தினேஷ் பாபு, பலரிடம் கடன் வாங்கி நிதி நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ததாகவும், அதன் உரிமையாளர் தலைமறைவானதால் 15 லட்ச ரூபாய் வரை கடனில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

மனைவியின் 25 சவரன் நகைகளை அடகு வைத்து கடனை அடைத்துவந்த நிலையில், தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டதால், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமலும், மனைவியின் மருத்துவ செலவுக்கு பணமில்லாமலும் தவித்துவந்ததாக சொல்லப்படுகிறது.

நேற்று மாலை, மனைவி உடன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய தினேஷ் பாபு, பின் மனைவியை அவரது தாயார் வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளார். 

செல்போன் அழைப்புகளை தினேஷ் பாபு எடுக்காததால், மனைவி கூறியதன் பேரில், பக்கத்து வீட்டுக்காரர்கள் சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments