மாணவர்கள் அரசியலில் பங்கேற்றால் நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க முடியும்: அன்புமணி
மக்களுக்கு அரசியல்வாதிகள் மீது நன்மதிப்பு ஏற்பட இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், சிறார்கள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதால் அவர்களின் சிந்திக்கும் திறன் குறைவதாகவும், அப்பா, அம்மா பெயரைக்கூட வலைதளத்தில் தேடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய பா.ம.க. தலைவர் அன்புமணி, கல்வி, வேலை, குடும்பம் என மட்டும் இருக்காமல் அரசியலிலும் மாணவர்கள் பங்களித்தால் தான் நல்ல தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றார்.
Comments