அமெரிக்கா தோல்வி பயத்தால் அதிபர் தேர்தலில் இருந்து பைடன் விலகல் : டிரம்ப்

0 352

தோல்வி பயத்தால் ஜோ பைடன் அதிபர் தேர்தலில் இருந்து விலகியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஜோ பைடனின் வெள்ளை மாளிகை உரை தெளிவாக இல்லை என விமர்சித்த டிரம்ப், பைடன் விலக மறுத்திருந்தால் கட்சியை விட்டே நீக்கப்பட்டிருப்பார் என்றார்.

வடக்கு கரோலினாவில் பிரச்சாரம் செய்த டிரம்ப், தனக்கு எதிராக களமிறங்க இருக்கும் கமலா ஹாரிஸை கடுமையாக விமர்சித்தார். அமெரிக்காவுக்குள் சட்டவிரோத நுழைவை தடுத்து நிறுத்த ஜோ பைடன், கமலா ஹாரிஸை நியமித்திருந்த நிலையில், அவர் 2 கோடி பேரை அமெரிக்காவுக்குள் ஊடுருவ விட்டுவிட்டதாக டிரம்ப் குற்றம்சாட்டினார்.

சட்டவிரோதமாக புலம்பெயர்வோரை வேற்று கிரகவாசிகள் என்றும் டிரம்ப் சாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments