அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகியது குறித்து ஜோ பைடன் பேச்சு
ஜனநாயகக் கட்சியில் ஒற்றுமையை நிலைநாட்டவும், நாட்டின் நலனுக்காகவும் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து தாம் விலகியதாக ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் இருந்து பேசிய அவர், அதிபர்கள் மன்னர்கள் அல்ல என்றும், இளைஞர்களின் கரங்களில் பொறுப்பை கைமாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்க மக்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் ஜோபைடன் தெரிவித்தார். ஜோபைடன் நிகழ்த்திய 11 நிமிட உரையை அதிபரின் குடும்பத்தினரும் அருகில் இருந்து உணர்ச்சிபொங்கக் கேட்டனர்.
Comments