கெமிஸ்ட்ரியா..?அப்படீன்னா ? இப்படி பாடம் நடத்தினால் தேர்ச்சி விகிதம் எப்படி இருக்கும்? அதிரடி காட்டிய மாவட்ட ஆட்சியர்
திருத்தணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு நடத்திய மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், 12 ஆம் வகுப்பு மாணவர்களிடம் கெமிஸ்ட்ரி குறித்து கேள்வி கேட்ட போது , பதில் தெரியாமல் விழித்த மாணவர்களால், ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியரை, ஆட்சியர் எச்சரித்து சென்ற சம்பவம் அரங்கேறியது
ஆண்டுக்கு பல கோடிகளை கொட்டி ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கல்வியை அரசு வழங்கி வரும் நிலையில், அடிப்படையான கேள்விகளுக்கு கூட பதில் அளிக்க இயலாத அளவிற்கு மாணவர்களை தயார் செய்து வைத்திருந்ததாக ஆசிரியையை திருவள்ளூர் மாவட்டஆட்சியர் பிரபு சங்கர் எச்சரித்த காட்சிகள் தான் இவை..!
திருத்தணியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் திடீர் ஆய்வுக்கு சென்றார். அப்போது 12 ஆம் வகுப்பில் கெமிஸ்ட்ரி பாடம் நடந்து கொண்டிருந்தது. மாணவர்களிடம் ஆசிரியை புரியும் வகையில் பாடம் நடத்துகிறாரா ? என்று கேள்வி எழுப்பினார்
பெரும்பாலான மாணவர்களுக்கு ஆசிரியை என்ன பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார் ? என்றே தெரியவில்லை
உடனடியாக கெமிஸ்ட்ரி பாடப்புத்தகத்தை கையில் வாங்கிய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், ஒவ்வொரு மாணவரிடமும் சென்று சிரித்த முகத்துடன் கேள்வி எழுப்ப , பலர் திருதிருவென விழித்தனர்
ஒரு மாணவன் வகுப்பிற்கு தாமதமாகத்தான் வந்ததாக தெரிவித்தான், விசாரித்தால் இரு வகுப்பு மாணவர்களை ஒரே வகுப்பில் வைத்து பாடம் நடத்துவது தெரியவந்தது.
பலருக்கு இன்று நடத்திய பாடமும் புரியவில்லை, முந்தின நாள் நடத்திய பாடமும் தெரியாமல் விழித்ததால் ஆசிரியையிடம் கடிந்து கொண்டார் மாவட்ட ஆட்சியர்
இப்படி பாடம் நடத்தினால்... எப்படி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் உயரும் ? என்று அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை அழைத்து கடுமையாக எச்சரித்தார்
மாணவர்களின் கல்வியின் தரத்தை உயர்த்த இயலவில்லை என்றால் இடமாறுதல் பெற்றுச்சென்று விடுங்கள் என்று எச்சரித்து விட்டு புறப்பட்டார் ஆட்சியர் பிரபு சங்கர்
Comments