திரிபுவன் விமான நிலையத்தில், சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கி விபத்து.. 18 பேர் உயிரிழப்பு
நேபாள தலைநகர் காத்மாண்டுவின் திரிபுவன் விமான நிலையத்தில், சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர்.
விமான நிறுவனத்தைச் சேர்ந்த 17 தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் ஒரு விமானி, துணை விமானியுடன் காத்மாண்டுவில் இருந்து பொக்காராவுக்கு இந்த விமானம் புறப்பட்டது. ஓடுபாதையில் வேகமாக ஓடி டேக்-ஆஃப் ஆன சில விநாடிகளில் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.
இந்த விபத்தையடுத்து விமான நிலையம் மூடப்பட்டு, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினரும் மீட்புக் குழுவினரும் ஈடுபட்டனர். படுகாயத்துடன் மீட்கப்பட்ட விமானி மணிஷ் சக்கியா, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீயில் கருகி உயிரிழந்த நிலையில் துணை விமானி மற்றும் 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments