ஏ.டி.எம்மில் ரூ.3 லட்சத்தை மறந்து சென்ற வங்கி ஊழியர்.. பணத்தை நிரப்பாமல் ஏ.டி.எம்மிலேயே வைத்து சென்றதாக தகவல்

0 804

தாராபுரம் அருகே தாசர்பட்டி கிராமத்தில் கனரா வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பாமல் வங்கி ஊழியர் மறந்து வைத்துச் சென்ற 3 லட்சம் ரூபாயை 4 மணி நேரத்திற்கு பிறகு ரோந்து போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.

ஏ.டி.எம்மில் நிரப்புவதற்காக 5 லட்சம் ரூபாய் பணத்தை கொண்டு சென்ற ஊழியர் அதில் 2 லட்சம் ரூபாயை மட்டும் இயந்திரத்தில் நிரப்பிவிட்டு மறதியில் மிச்ச பணத்தை அங்கேயே வைத்துவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

இரவு 9 மணிக்கு வழக்கமான சோதனைக்காக ஏ.டி.எம் சென்ற தாராபுரம் போலீசார், பணத்தை கண்டெடுத்து வங்கியை தொடர்புகொண்டு ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments