அமைச்சர் பன்னீர்செல்வம் , கோவைவேளாண்துறை பேராசிரியர்கள் ஆஸ்திரேலியா பயணம்

0 510

தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள்அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்றுள்ளனர்.

இன்று மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அட்ரியன் லிட்டில் மற்றும் பேராசிரியர்கள், ஆராய்ச்சியார்களுடன் கலந்துரையாடினர்.

அங்கு நடைபெற்ற கூட்டத்தில்  வேளாண்மையில் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்துதல், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளின் தொழில்நுட்பங்கள்,காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப புதிய பயிர் ரகங்களை அறிமுகம் செய்தல்மற்றும் மெல்பர்ன் பல்கலைக்கழகமும், தமிழக வேளாண் பல்கலைக்கழமும்  இணைந்து மாணவர்களுக்கான இணையவழிக் கல்விஅறிமுகம் செய்வது குறித்தும் கலந்துரையாடிதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments