மனையை உட்பிரிவு செய்ய ரூ.10,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

0 424

திருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த முனியப்பன் என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயர் முருகேசன் கையும் களவுமாகப் பிடிபட்டார்.

கொட்டப்பட்டு கிராமத்தில் தனக்குச் சொந்தமான ஆயிரத்து 200 சதுர அடி மனையை உட்பிரிவு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்ய திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் முனியப்பன் விண்ணப்பித்துள்ளார்.

அந்த விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுத்து உட்பிரிவு செய்து தர லஞ்சம் வாங்கிய முருகேசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments