பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 3ஆவது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்
5 மாநில மேம்பாட்டுக்கு சிறப்புத் திட்டம்
ஆந்திரா மறுசீரமைப்புக்கு சிறப்புத் திட்டம்
ஆந்திர தலைநகர் அமராவதி வளர்ச்சிக்கு ரூ.15,000 கோடி
பீகார், ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை மேம்படுத்த சிறப்புத் திட்டங்கள்
ஆந்திரா மாநில மறுசீரமைப்பு சிறப்புத் திட்டம் அனுமதிக்கப்பட்டு, அமராவதி நகர வளர்ச்சிக்கு ரூ.15000 கோடி ஒதுக்கீடு
சென்னை-ஹைதராபாத் தொழில்வழித்தட திட்டம்
சென்னை-ஹைதராபாத்-விசாகப்பட்டினம் தொழில்வழித்தட திட்டம்
3 கோடி கூடுதல் வீடுகள்
அனைவருக்கும் வீடு கட்டும் பிரதமரின் திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு
MSME வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
ரூ.100 கோடி வரையில் கடன் உறுதி
குறு, சிறு, நடுத்தர தொழில்துறையினர் வளர்ச்சிக்காக கடன் உறுதி திட்டம் அறிமுகம்
குறு, சிறு, நடுத்தர உற்பத்தி தொழில் நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி வரையில் கடன் உறுதி வழங்கப்படும்
மேலும் 100 உணவு தர பரிசோதனை மையங்கள்
உணவின் தரத்தை பரிசோதிக்கும் வகையில் நாட்டில் மேலும் 100 தர பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும்
தொழிலாளர்கள் தங்கும் விடுதிகள்
அரசு தனியார் பங்களிப்போடு தொழிலாளர்கள் தங்குவதற்கு டாமிட்ரி பாணியில் வாடகை விடுதிகள் அமைக்கப்படும்
முன்னணி 500 நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப்
ரூ.6000 உதவித்தொகையுடன் இன்டர்ன்ஷிப்
1 கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப்
முன்னணியில் உள்ள 500 நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு ரூ.6,000 உதவித்தொகையுடன் இன்டர்ன்ஷிப்
நகர வீடு கட்டும் திட்டங்களுக்கு ரூ.10 லட்சம் கோடி
நகர்புற வீடு கட்டும் திட்டத்தில் 1 கோடி வீடுகள்
நகர்புற வீடு கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ.10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
நகர்புறத்தில் வாழும் ஏழைகள், மற்றும் நடுத்தர மக்களுக்கான வீடு கட்டும் திட்டம்
கல்வித்துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி
பள்ளி, கல்லூரிகள் மேம்பாடு உட்பட கல்வித்துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு
வீடுகளில் சோலார் மின் தகடுகள் திட்டம் விரிவாக்கம்
வீடுகளின் மேற்கூரையில் சோலார் தகடு அமைப்பதன் மூலம் மின் செலவை குறைக்கும் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்
1 கோடி வீடுகளில் சோலார் மின் தகடு அமைக்கும் திட்டத்திற்கு, 1.28 கோடி விண்ணப்பங்கள் வந்ததால் திட்டத்தை விரிவாக்கம் செய்ய முடிவு
வீடுகளின் மேற்கூரையில் சோலார் மின் தகடுகள் அமைத்தால் மாதம் ஒன்றிற்கு 300 யூனிட் வரை மின்சாரம் பெறலாம்
மேலும் 24 இடங்களில் Sidbi கிளைகள்
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கிடும் வங்கிகளை மேலும் 24 இடங்களில் நிறுவ முடிவு
பீகாரில் வழிபாட்டு தலங்கள் மேம்படுத்தப்படும்
பீகாரில் விஷ்ணு பாதம், மகா போதி, ராஜ்கிர் ஜைன ஆலயம் ஆகிய வழிபாட்டுத் தலங்கள் மேம்படுத்தப்படும்
வெளிநாடுகளுடன் இந்திய ரூபாயில் பரிவர்த்தனை
வெளிநாட்டு பணப்பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்துவதை மேலும் விரிவாக்கம் செய்யத் திட்டம்
அனைத்து தரப்பும் ஜிஎஸ்டி.யால் பயன்
ஜிஎஸ்டியால் மத்திய, மாநில அரசுகள், நுகர்வோர் உள்ளிட்ட அனைத்து தரப்புக்கும் பயன் ஏற்பட்டுள்ளது
புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு
மேலும் 3 புற்றுநோய் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான சுங்க வரி விலக்கு
செல்போன், சார்ஜர் உற்பத்தி வரி 15%ஆக குறைப்பு
செல்போன் விலை குறைகிறது
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க செல்போன், மொபைல் சார்ஜர் ஆகியவற்றின் மீதான உற்பத்தி வரி 15%ஆக குறைப்பு
25 முக்கிய கனிம இறக்குமதிக்கு சுங்கவரி விலக்கு
25 முக்கிய கனிமங்களை இறக்குமதி செய்ய, சுங்கவரி செலுத்துவதிலிருந்து விலக்கு
தங்கம், வெள்ளி சுங்க வரி குறைப்பு
தங்கம் விலை குறைய வாய்ப்பு
தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 6%ஆக குறைப்பு
பிளாட்டினம் மீதான சுங்க வரியும் 6.4%ஆக குறைக்கப்படுவதாக அறிவிப்பு
பிளாஸ்டிக் மீதான சுங்க வரி அதிகரிப்பு
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக பிளாஸ்டிக் மீதான சுங்க வரி 25%ஆக அதிகரிப்பு
அறக்கட்டளைகளுக்கு ஒரே வரி முறை அறிமுகம்
அறக்கட்டளைகளுக்கு இதுவரை இருந்த 2 வரி முறைகள், ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே வரி முறையாக அறிமுகம்
வருமான வரி தொடர்பான அறிவிப்புகள்....
வருமான வரி செலுத்துவோரில் 3ல் 2 பங்கு பேர் புதிய வருமான வரி முறைக்கு மாறியுள்ளனர்
நேரடி வரி விதிப்பை, மேலும் எளிமைப்படுத்தி அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்
சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிகுறைப்பு
அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில், சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 40%லிருந்து 35%ஆக குறைப்பு
வருமான வரி முறையில் சலுகை
நிலையான கழிவு ரூ.75,000ஆக அதிகரிப்பு
வருமான வரிமுறையில் நிலையான கழிவு(Standard Deduction) ரூ.50,000லிருந்து ரூ.75,000ஆக அதிகரிப்பு
வருமான வரி முறையில் மாற்றம்
வருமான வரி நடைமுறையில் ரூ.3 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு வரி இல்லை
ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 5% வரி விதிக்கப்படும்
ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 10% வரி விதிக்கப்படும்
ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 15% வரி விதிக்கப்படும்
ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு 20% வரி விதிக்கப்படும்
ரூ.15 லட்சம் மேல் வருமானம் பெறுவோருக்கு 30% வருமான வரி விதிக்கப்படும்
ரூ.3 லட்சம் வரை வரி இல்லை
ரூ.3 லட்சம் - ரூ.7 லட்சம் 5%
ரூ.7 லட்சம் - ரூ.10 லட்சம் வரை 10%
ரூ.10 லட்சம் - ரூ.12 லட்சம் 15%
ரூ.12 லட்சம் - ரூ.15 லட்சம் 20%
ரூ.15 லட்சத்திற்கு மேல் 30%
வருமான வரி திட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தால் வரி செலுத்துவோருக்கு ஆண்டுக்கு ரூ.17,500 மிச்சமாகும்
Comments