மத்திய பொது பட்ஜெட் தாக்கல்... 7ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்

0 1506

'மத்திய பொது பட்ஜெட்' தாக்கல்

7ஆவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்

2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்

நாடாளுமன்ற மக்களவையில் 2024-2025ஆம் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் தாக்கல்

7ஆவது முறையாக முழு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

இந்திய பொருளாதார வளர்ச்சி தொடரும்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலகளவில் ஜொலிக்கும் வகையில் நீடித்து வருகிறது; இனியும் தொடரும்

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை முன்னிறுத்தி நமது கொள்கைகள் அமைந்துள்ளன - நிதியமைச்சர்

இலவச உணவு தானிய திட்டங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது

image

விலைவாசி கட்டுக்குள் உள்ளது

நாட்டின் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளன

நாட்டின் பணவீக்கம் மேலும் குறைந்து 4%ஆக சரிவடையும்image

 கல்வி, வேலைவாய்ப்புக்கு ரூ.1.48 லட்சம் கோடி

கல்வி, வேலைவாய்ப்பு, திறன்மேம்பாட்டிற்கு ரூ.1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு

image

இயற்கை வேளாண்மையில் 1 கோடி விவசாயிகள்

அடுத்த 2 ஆண்டுகளில் இயற்கை வேளாண்மையில் ஈடுபட 1 கோடி விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள்

பருப்பு, எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவு பெற....

பருப்பு, எண்ணெய் வித்து உற்பத்தியில் தன்னிறைவு பெற திட்டங்கள் முன்னெடுக்கப்படும்

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத பயிர்கள்

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத பயிர்களை அறிமுகம் செய்யத் திட்டம்

10,000 உயிரி ஆராய்ச்சி மையங்கள்

நாடு முழுவதும் 10,000 உயிரி ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும்

வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி

நாட்டில் உள்ள வேளாண்துறையில் மானியம், கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்காக ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு

4 கோடி பேருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்க இலக்கு

அடுத்த 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்க இலக்கு: நிர்மலா சீதாராமன்

இந்திய மக்கள் சாதி, மத வேறுபாடின்றி வளர்ச்சி பெற பிரதமர் உழைத்து வருகிறார்

சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை நீடித்தாலும் இந்திய பொருளாதார வளர்ச்சி நிலையாக உள்ளது

இளைஞர்கள் நலனிற்காக 5 சிறப்பு திட்டங்கள்

இளைஞர்கள் நலனிற்காக 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது

20% லாபத்தில் குறைந்தபட்ச ஆதார விலை

அடக்க விலையை காட்டிலும் 20% லாபத்தில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுகிறது

வேளாண் உற்பத்தியை அதிகரிக்க கூடுதல் கவனம்

வேளாண் உற்பத்தியை அதிகரிக்க அரசு தீவிர கவனம் செலுத்துகிறது

டிஜிட்டலாகும் விவசாயம்

விவசாயத்தில் டிஜிட்டல் தொழிநுட்பத்தை அமலாக்க மாநில அரசுகளுடன் இனைந்து நடவடிக்கை

image

102 வகை புதிய பயிர்கள் அறிமுகம்

பருவ நிலையை தாக்குபிடித்து வளரும் 102 வகை புதிய பயிர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது

இளைஞர் முன்னேற்றத்திற்கு ரூ.2 லட்சம் கோடி

4.1 கோடி இளைஞர்களின் முன்னேற்றதுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்படும்

image

வேலைவாய்ப்பு அதிகரிக்க ஊக்கத்தொகை

வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை வழங்கும் 3 திட்டங்கள் அறிமுகம்

முதல் திட்டத்தின்படி முதன்முறையாக வேலையில் சேர்பவர்களுக்கு ஒரு மாதம் ஊதியம் வழங்கப்படும்

20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி

அடுத்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்

20 லட்சம் இளைஞர்களை பணி திறனோடு உருவாக்கும் வகையில் நாடு முழுவதும் 1,000 பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும்

வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக விடுதி மற்றும் குழந்தை பராமரிப்பகங்கள் ஏற்படுத்தப்படும்

பெண்களுக்கு தங்கும் விடுதிகள்

பணிபுரியும் பெண்களுக்கான சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்

imageரூ.10 லட்சம் வரை கல்விக்கடன்

 உள்நாட்டு கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் கல்வி கற்கும் வகையில் ரூ.10 லட்சம் வரையில் கல்விக்கடன் வழங்கப்படும்

image

5 மாநில மேம்பாட்டுக்கு சிறப்புத் திட்டம்

ஆந்திரா மறுசீரமைப்புக்கு சிறப்புத் திட்டம்

அமராவதி நகர வளர்ச்சி கட்டமைப்புக்கு ரூ.15000 கோடி

பீகார், ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை மேம்படுத்த சிறப்புத் திட்டங்கள்

ஆந்திரா மாநில மறுசீரமைப்பு சிறப்புத் திட்டம் அனுமதிக்கப்பட்டு, அமராவதி நகர வளர்ச்சிக்கு ரூ.15000 கோடி ஒதுக்கீடு

image

சென்னை-ஹைதராபாத் தொழில்வழித்தட திட்டம்

சென்னை-ஹைதராபாத்-விசாகப்பட்டினம் தொழில்வழித்தட திட்டம்

3 கோடி கூடுதல் வீடுகள்

அனைவருக்கும் வீடு கட்டும் பிரதமரின் திட்டத்தின் கீழ் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு

9 முன்னுரிமை திட்டங்கள்

1. வேளாண் உற்பத்தி

2. வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு

3. அனைவரையும் உள்ளடக்கிய மனித வள மேம்பாடு

4. உற்பத்தி மற்றும் சேவைத்துறை

5. நகர்ப்புற வளர்ச்சி

6. எரிசக்தி பாதுகாப்பு

7. உள்கட்டமைப்பு

8. புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு

9. புதிய தலைமுறை சீர்திருத்தங்கள்

 பீகாருக்கு ரூ.26,000 கோடி சிறப்பு நிதி

ரூ.26,000 கோடியில் பீகாரில் விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்டவை அமைக்கப்படும்

image

ஊரக வளர்ச்சிக்கு ரூ.2.66 லட்சம் கோடி

நாட்டின் ஊரக வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி

முத்ரா கடன் - ரூ.20 லட்சமாக அதிகரிப்பு

முத்ரா கடனுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்

image

பெண்கள் திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி

பெண் குழந்தைகள், பெண்கள் மேம்பாட்டிற்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு

12 தொழிற்பூங்காக்கள் உருவாக்கம்

நாடு முழுவதும் புதிதாக 12 தொழிற்பூங்காக்கள் உருவாக்கப்படும்

புதிதாக இ-காமர்ஸ் ஏற்றுமதி மையங்கள்

அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய இ-காமர்ஸ் ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்படும்

கனிம வளங்களை மறுசுழற்சி செய்ய புதிய திட்டம்

உள்நாட்டில் உள்ள தாதுக்கள், கனிம வளங்களை மறுசுழற்சி செய்யும் வகையில் புதிய திட்டம்

சாலை இணைப்பு திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி

புதிய சாலை இணைப்பு திட்டங்களை மேம்படுத்த ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு

image

திவாலான நிதி நிறுவனங்களிடம் பணத்தை பெற ஆணையம்

திவாலான நிதி நிறுவனங்களிடம் இருந்து மக்களுக்கு பணத்தை பெற்றுத்தர ஆணையம் அமைக்கப்படும்

நகர்ப்புற திட்டகழிவு மேலாண்மைக்கு புதிய திட்டம்

மாநில அரசு, வங்கிகளுடன் இணைந்து நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மைக்கு புதிய திட்டம்

ஜி.டி.பி.யில் 3.4% உட்கட்டமைப்பிற்கு ஒதுக்கீடு

உள்நாட்டு உற்பத்தியில் 3.4% உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஒதுக்கீடு

உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ.11.11 லட்சம் கோடி

நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு மேலும் ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு

பீகாரில் வெள்ளத்தடுப்பு நிவாரணம் - ரூ.11,500 கோடி

பீகார் மாநில வெள்ள தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ரூ.11,500 கோடி நிதி ஒதுக்கீடு

பீகாரில் மின் ஆலைகள் அமைக்க ரூ.21,400 கோடி

பீகாரில் 2400 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் ஆலைகள் அமைக்க ரூ.21,400 கோடி

image

பழங்குடியின மக்களுக்கு சிறப்பு திட்டங்கள்

பழங்குடியின மக்களுக்கான சிறப்பு திட்டங்களை செயல்படுத்த ரூ.5 கோடி நிதி

கிராம சாலைகளுக்கு புதிய திட்டம்

25,000 ஊரக வாழ்விடங்களை இணைக்கும் வகையில் கிராம சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது

வெள்ள பாதிப்பு - அசாம், இமாச்சலுக்கு நிதியுதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம், இமாச்சல், உத்தரகாண்ட் மாநிலங்களில் மறுகட்டமைப்பு மேற்கொள்ள நிதி வழங்கப்படும்

image

மிகப்பெரிய சுற்றுலா மையமாக இந்தியா உருவாக்கப்படும்

உலகளவில் மிகப்பெரிய சுற்றுலா மையமாக இந்தியா உருவாக்கப்படும்

விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி

நாட்டின் விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு

image

மாநிலங்களுக்கு நீண்ட கால வட்டியில்லா கடன்

உட்கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசுகளுக்கு நீண்ட கால வட்டியில்லா கடன் வழங்க ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கீடு

நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்த ரூ.11,500 கோடி

நாடு முழுவதும் விவசாயத்துறைகளில் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்த ரூ.11,500 கோடி ஒதுக்கீடு

நிதி பற்றாக்குறை 4.9% என கணிப்பு

நடப்பு நிதியாண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை 4.9%-ஆக இருக்கும்

அடுத்த நிதியாண்டில் நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறை 4.5%-ஆக குறைக்க இலக்கு

image

 அந்நிய முதலீடு - விதிகள் எளிதாக்கப்படும்

அந்நிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்க்கும் வகையில் விதிகள் எளிமையாக்கப்படும்

தொழில் தொடங்குவதை எளிதாக்க புதிய மசோதா

தொழில் தொடங்குவதை எளிதாக்க ஜன்விஷ்வாஸ் 2.0 மசோதா கொண்டுவரப்படும்

மொத்த வருவாய் ரூ.32.07 லட்சம் கோடி

நடப்பு நிதியாண்டுக்கான மொத்த வருவாய் ரூ.32.07 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்ப்பு

image

தாமத வருமான வரித்தாக்கல் - கிரிமினல் குற்றமில்லை

தாமதமாக வருமான வரி தாக்கல் செய்யப்படுவது இனி கிரிமினல் குற்றமாக கருதப்படாது

image

''புதிய தனிநபர் வருமான வரி முறை - மக்கள் ஏற்பு''

மூன்றில் இரு பங்கு மக்கள் புதிய தனி நபர் வருமான வரி முறையை ஏற்றுக் கொண்டுள்ளனர்

மூலதன ஆதாய வரி விதிப்பு

குறிப்பிட்ட சில முதலீடுகளுக்கு 20% குறுகிய கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்

முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி ரத்து

முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

ரூ.14 லட்சம் கடன் வாங்க முடிவு

நடப்பு நிதியாண்டில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க ரூ.14 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments