டெல்லியில் பிரதமர் மோடியின் 3.O அரசின் பட்ஜெட் இன்று தாக்கல்
பிரதமர் மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூன்றாவது அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
இது நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாகத் தாக்கல் செய்யும் 7வது பட்ஜெட் ஆகும். வருமான வரி உச்சவரம்பு தளர்வு , சுகாதாரம், உள்கட்டுமானம், புதிய வந்தே பாரத் ரயில்களின் அறிவிப்பு, கல்வி, பாதுகாப்பு, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
விக்சித் பாரத் 2047' திட்டத்தின் வரைபடமாக இந்த பட்ஜெட் இருக்கும் என்று அண்மையில் பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்தியாவின் பொருளாதாரம் உறுதியாகக் காலூன்றி இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
Comments