மாநகரப் பேருந்தில் பெண்ணின் கைப் பையிலிருந்து ரூ.1 லட்சம் திருட்டு.. பணம் பறிபோனதால் தலையில் அடித்து கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்

0 680

சென்னை, திருவொற்றியூரில் மாநகர பேருந்தில் பயணம் செய்த பெண்ணின் கைப் பையிலிருந்த ஒரு லட்சம் ரூபாய் காணாமல் போனதாக, தலையில் அடித்துக் கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

அமுலு என்பவர் தனது தம்பி மனைவியுடன் வண்ணாரப்பேட்டையில் துணிகள் வாங்கிக் கொண்டு சிமென்ட்ரி ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து தடம் எண் 56A என்ற பேருந்தில் ஏறிய நிலையில், ராஜாக்கடை பேருந்து நிறுத்தம் வந்தபோது பணம் இல்லாதது தெரியவந்துள்ளது.

அவ்வழியாக ரோந்து வந்த போலீசார் தகவல் அறிந்து பேருந்து பயணிகளிடம் சோதனை செய்த நிலையில், இதுகுறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் அமுலு புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments