கணவனை இழந்த பெண் தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை.. நீதி கேட்டு 100க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு

0 775

நாகை அருகே கணவனை இழந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு கடும் தண்டனை பெற்றுத்தரவேண்டும் என வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெற்குப்பொய்கைநல்லூரில் கணவரை இழந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், 16 வயது மதிக்கத்தக்க மகளும் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த 18ம் தேதி நள்ளிரவு முத்துக்குமார் என்பவன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான்.

அப்போது மகள் தப்பி ஓடிய நிலையில் தாயின் விரலை கடித்து துண்டித்தும் சத்தம் போடாமல் இருக்க வாயில் மண்ணைக் கொட்டியும்  பல்வேறு இடங்களில் காயப்படுத்தியும் சித்திரவதை செய்து தூக்கி வீசியதாகவும் கூறப்படுகிறது.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மேட்டை சேர்ந்த முத்துக்குமார் போலீசார் பிடிக்கச் சென்ற போது, தப்பி ஓடியதில், கீழே விழுந்து கை காலில் முறிவு ஏற்பட்டு ஒரத்தூர் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments