மது குடிக்க பணம் கேட்டு தாயிடம் தகராறு.. ஆத்திரத்தில் அண்ணனை கொன்ற தம்பி.. உடந்தையாக இருந்த தாய் கைது

0 510

மதுவுக்கு அடிமையாகி, குடிக்க பணம் கேட்டு தாயுடன் நடந்த தகராறில் உயிரிழந்த சகோதரரின் உடலை கொள்ளிடம் ஆற்றில் வீச முயன்ற தம்பியையும், அவருக்கு உடந்தையாக இருந்த தாயையும் போலீசார் கைது செய்தனர்.

நேற்று இரவு கொள்ளிடம் ஆற்று மேம்பாலத்தின் கிடந்த ஆணின் சடலத்தை மீட்ட போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் ஆட்டோவின் பதிவெண் மூலம் பீமநகரை சேர்ந்த பர்வீன் பானு, அவரது மகன் சையது அபுதாஹிர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

மதுபோதைக்கு அடிமையான தனது அண்ணன் தமிமுன் அன்சாரி குடிப்பதற்கு பணம் கேட்டு தாயிடம் தகராறு செய்ததால், அரிவாளால்அவரது தலையில் வெட்டியும், மின்சார ஒயரால் கழுத்தை இறுக்கியும் கொலை செய்ததாக சையது அபுதாஹிர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments