கோயம்புத்தூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த தனியார் ஆம்னி பேருந்து... இறக்கிவிட்டதால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு

0 452

திருவண்ணாமலையிலிருந்து கோயம்புத்தூர் வந்த ஆகாஷ் டிராவல்ஸ் என்ற தனியார் ஆம்னி பேருந்தின் டீசல் டேங்கில் ஓட்டை ஏற்பட்டு டீசல் கசிந்ததால் தீப்பிடித்து எரிந்தது. கே.எம்.சி.எச். மருத்துவமனை அருகில் வந்து கொண்டிருந்தபோது திடீரென புகை வந்ததும் ஓட்டுநர் உடனடியாக 30 பயணிகளையும் இறக்கி விட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

தீயணைப்புத்துறையினர் தீயை அணைப்பதற்குள் பேருந்து முற்றிலும் எரிந்த நிலையில், விபத்து குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments