அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிட பைடன் ஆதரவு

0 529

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிட ஜோ பைடன் ஆதரவு தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டில் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது கட்சி வேட்பாளராக எனது முதல் முடிவு கமலா ஹாரிசை துணை அதிபராக தேர்ந்தெடுத்ததுதான் என்று கூறியுள்ளார்.

இது தான் எடுத்த சிறந்த முடிவு என்றும் இந்த ஆண்டு தமது கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் வருவதற்கு முழு ஆதரவையும், ஒப்புதலையும் வழங்க விரும்பதாக பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட தேர்வான முதல் கருப்பின, முதல் ஆசிய வம்சாவழி பெண் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். மேலும் கமலா ஹாரிஸ் தாயார் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments