திருவண்ணாமலையில் தேநீர் கடைக்குள் கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த ஆட்டோ

0 351

திருவண்ணாமலை சன்னதி தெருவில் ஆட்டோக்கள் அதிகளவு இருந்த வந்த நிலையில் ஒரு ஆட்டோவில் இரண்டு பயணிகளை அமர வைத்து விட்டு, மேலும் பயணிகளை ஏற்ற அந்த ஆட்டோ ஓட்டுநர் இறங்கி சென்றார்.

அப்போது மற்றொரு ஆட்டோ ஓட்டுனர் குறுக்கே இருந்த ஆட்டோவை நகற்ற இயக்கிய போது கட்டுப்பாட்டை இழந்த அந்த ஆட்டோ, தேநீர் கடையில் உள்ளே புகுந்தது. அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.

சன்னதி தெருவில் ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு தடை உள்ளபோதும், அதை மீறும் ஓட்டுநர்களால் , பக்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments