பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உருவப் படத்தை அவர் மனைவி பொற்கொடி திறந்து வைத்தார்

0 607

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உருவப் படத்தை அவர் மனைவி பொற்கொடி திறந்து வைத்தார். ஆம்ஸ்ட்ராங்கின் 16ஆம் நாள் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.....

முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் மகள் பிறந்தநாள் விழாவில் நடைபெற்ற சுவாரஸ்ய நிகழ்வுகள் அகண்ட எல்இடி திரையில் ஒளிபரப்பானதை, கண்ணீர் மல்க, அவரது மனைவி பொற்கொடி பார்த்துக் கொண்டிருந்தார். தனது தந்தை இறந்ததை அறியாத ஒன்றரை வயது சிறுமி, ஆம்ஸ்ட்ராங் புகைப்படத்தை வைத்தபடி அங்குமிங்கும் நடமாடியதை கண்டு, அங்கிருந்தவர்கள் கண்கலங்கினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments