ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கொலையாளிகள் பயன்படுத்திய செல்போன்கள் ஆற்றில் கண்டெடுப்பு..

0 606

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கொலையாளிகள் பயன்படுத்திய  செல்போன்களின் உதிரிபாகங்கள், திருவள்ளூர் மாவட்டம் வெங்கத்தூர் ஆற்றில் இருந்து கைப்பற்றப்பட்டு, சென்னை மயிலாப்பூரில் உள்ள அரசு தடய அறிவியல் துறை சைபர் ஆய்வகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

கைதான அருள் கொடுத்த 6 செல்போன்களை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஹரிதரன், உடைத்து வெங்கத்தூர் ஆற்றில் வீசியதாக கூறப்படும் நிலையில் 2-வது நாளாக தீயணைப்புத் துறை வீரர்கள், ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் தீவிர தேடுதலில் ஈடுபட்டு சில செல்போன் உதிரி பாகங்களை மீட்டனர்.

அதன்படி 3 Display-க்கள், 1 Battery, 3 motherboard-கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மீட்கப்பட்ட செல்போன்களின் ஐஎம்இஐ எண்ணை வைத்து அந்த செல்போனில் எத்தனை சிம்கார்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, எந்தெந்த எண்ணில் இருந்தெல்லாம் அழைப்புகள் வந்துள்ளது என்ற விவரங்களை மீட்க முடிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments