தமிழக மாணாக்கர்கள் டாக்காவிலிருந்து வெளியேற்றம்.. நாட்டின் எல்லையில் தவித்து வரும் 32 மருத்துவ மாணாக்கர்கள்..
பங்களாதேஷில் நடைபெற்று வரும் போராட்டத்தால் தாங்கள் பயின்று வரும் மருத்துவக் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டு எல்லையில் காத்திருக்கும் தமிழக மருத்துவ மாணவ, மாணவிகள் 32 பேரையும் மீட்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
எல்லையில் உள்ள மேற்கு வங்க மாநிலத்திற்கு வந்தடைந்த நிலையில் மற்ற மாநிலங்கள் தங்களது மாணாக்கர்களை மீட்டுச் சென்றதாகவும், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அங்குள்ள மாணாக்கர்கள் தெரிவித்ததாக மாணவி ஒருவரின் பெற்றோர் கூறினார்.
Comments