மும்பையை மீண்டும் புரட்டிப் போட்ட கனமழை.. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்
மும்பையில் மீண்டும் கொட்டிய கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாயின.
தொடர்ந்து பெய்த மழையால் தாதர் கிழக்கு, மரைன் ட்ரைவ், லோயர் பரேல் உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தால் போக்குவரத்து முடங்கியது.
தண்ணீர் தேங்கியதால் அந்தேரி சுரங்கப்பாதை மூடப்பட்டது. அமிர்தசரசில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க இயலாமல், அகமதாபாத் விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டன.
கனமழை நீடிப்பதால் மக்கள் வீடுகளைவிட்டு வெளிவர வேண்டாம் என்றும் கடற்கரைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் மும்பை போலீசார் அறிவித்தனர். இதற்கிடையே, மும்பை, ராய்காட், தானே, ரத்தினகிரி, சிந்துதுர்க் ஆகிய பகுதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
Comments