காஸா போரில் இதுவரை சுமார் 38,919 பாலஸ்தீனர்கள் பலி... பிரதமர் நேதன்யாஹுவை கண்டித்து இஸ்ரேலியர்கள் பேரணி
காஸா போரில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
இஸ்ரேல் அரசை கண்டித்து, டெல் அவிவில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள், உடனடியாக போரை நிறுத்தி ஹமாஸ் வசமுள்ள பிணை கைதிகளை மீட்குமாறு வலியுறுத்தினர்.
1930-களில், ஹிட்லரின் நாஜி படைகள் யூதர்கள் மீது நிகழ்த்திய வன்முறையை தற்போது இஸ்ரேல் அரசு பாலஸ்தீனர்கள் மீது நிகழ்த்திகொண்டிருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.
வரும் புதன்கிழமை, அமெரிக்க நாடாளுமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு உரையாற்ற உள்ள நிலையில், போர் நிறுத்த உடன் படிக்கை விரைவில் எட்டப்படும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Comments