ஈரோடில் கடன் பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்... 3 பேர் சாவுக்கு காரணம் என்ன என காவல்துறை விசாரணை

0 679

ஈரோடு கருங்கல்பாளையத்தில், கடன் தொல்லையால் இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு, பின் தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஜாகிர் உசேன் என்பவருக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளிக்க அவரது மனைவி ஹஸீனா பல்வேறு மகளிர் குழுக்களிடம் இருந்து கடன் வாங்கி உள்ளதாகவும், கடன் பிரச்சினையால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்துவந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று காலை ஹஸீனா உடன் சண்டையிட்டுவிட்டு ஜாகீர் உசேன் ஹோட்டல் சப்ளையர் வேலைக்கு சென்றதும், ஹஸீனா, 11 மற்றும் 8-ஆம் வகுப்பு படித்துவரும் தன் இரு மகள்களுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் தூக்கிட்டுகொண்டதாக சொல்லப்படுகிறது.

தந்தையை நன்றாக பார்த்து கொள்ளுங்கள், அவரை குடிக்க வேண்டாம் என சொல்லுங்கள் என உருது மொழியில் எழுதப்பட்டிருந்த ஒரு உருக்கமான கடிதம் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments