வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் போர்க்களமான டாக்கா நகரம்
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டை அகற்றக்கோரி நடந்துவரும் போராட்டங்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் சுதந்திரம் பெற பாடுபட்டவர்களின் வம்சாவளியினருக்கு அரசு பணிகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுவருகிறது.
ஆளும் கட்சி ஆதரவாளர்களின் குடும்பத்தினரே இதனால் பயனடைவதாக கூறி பல மாணவர் சங்கங்கள் போராட்டம் நடத்திவருகின்றன. ஆளும் கட்சி ஆதரவு மாணவர் அமைப்புகள் மற்றும் போலீசாருடன் அவர்கள் மோதிவருகின்றனர்.
அரசு தொலைக்காட்சி தலைமை அலுவலகத்துக்குள் புகுந்து அவர்கள் தீ வைத்ததால் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. ஃபேஸ்புக் குழுக்கள் மூலம் கலவரங்கள் ஒருங்கிணைக்கப்படுவதாக கூறி அந்த தளம் முடக்கப்பட்டுள்ளது.
Comments