ராசிபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு

0 453

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கருத்துக் கேட்காமல் தனி நபரின் நோக்கத்திற்காக அணைப்பாளையம் கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாக கண்டனம் தெரிவித்து, ராசிபுரத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தற்போதுள்ள பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதால் வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணைப்பாளையத்தில் பல ஏக்கரில் நிலம் வைத்துள்ள தனியார் நிறுவனம் பேருந்து நிலையத்திற்காக 7 ஏக்கர் நிலம் அளித்துள்ளதாகவும், அந்நிறுவனத்தின் வியாபார நோக்கத்திற்காக புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும் வியாபாரிகளும் சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments