தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு மசோதா... தொழில்துறை அதிருப்தி -பின்வாங்கிய கர்நாடகா அரசு
கர்நாடகாவில் தனியார் நிறுவனங்களின் பணியிடங்களில் 75 சதவிகிதமும், நிர்வாகப் பணிகளில் 50 சதவிகிதமும் கன்னடர்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கும் மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது, அம்மாநில தொழில்துறையினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த மசோதா சட்டமானால் கர்நாடகாவை விட்டு பல நிறுவனங்கள் வெளியேறும் சூழல் ஏற்படும் என அசோசெம் அமைப்பு தெரிவித்தது. ஐ.டி., உற்பத்தி, ஸ்டார்ப்அப் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் சர்வதேச அளவில் போட்டியிடும் நிலையில், மொழி மற்றும் மாநிலரீதியான கட்டுப்பாடுகள் வந்தால் அந்த மாநிலத்தை விட்டு வெளியேறுவதை தவிர வழியில்லை என ஐ.டி. நிறுவனங்களின் அமைப்பான நாஸ்காம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, கடும் அதிருப்தி எழுந்ததைத் தொடர்ந்து, மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சமூகவலைத்தளத்தில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.
Comments