வங்கதேசத்தில் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை மாற்றக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் வன்முறைக்கு 6 பேர் பலி
வங்கதேசத்தில் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டு வர வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. டாக்காவில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
இதையடுத்து, போராட்டத்தை இன்று நாடு முழுவதும் விரிவுபடுத்தப் போவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து, டாக்கா பல்கலைக்கழகத்தை மூடவும் விடுதிகளில் இருந்து மாணவர்களை வெளியேற்றவும் அரசு உத்தரவிட்ட நிலையில், போராட்டத்தை தூண்டி விடுவதாக ஏற்பட்ட சந்தேகத்தில் எதிர்க்கட்சி அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
இதற்கிடையே, மாணவர்கள் அமைதி காக்குமாறும் 6 பேர் உயிரிழந்ததற்கு வருந்துவதாகவும் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
Comments