மயிலாடுதுறை கார்- மொபட் மோதல்: எம்.எல்.ஏ உள்பட 3 பேருக்கு காயம்

0 367

மயிலாடுதுறை மாவட்டம் காளியப்பநல்லூரில் ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் பயணித்த கார் மோதியதில் மொபட்டில் சென்ற பள்ளி மாணவன் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர், எம்.எல்.ஏவிற்கு லேசான காயம் ஏற்பட்டது.

கட்டுப்பாட்டை இழந்த கார் ஒரு வீட்டின் போர்டிகோவில் நிறுத்தியிருந்த கார் மற்றும் டூவீலர் மீது மோதி நின்றது. அவ்வழியாக வந்த மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை காயமடைந்த இருவரையும் மீட்டு தான் வந்த அரசு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

எம்.எல்.ஏ காரைக்காலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது, சர்வீஸ் சாலையிலிருந்து திடீரென நெடுஞ்சாலைக்கு ஏறிய மொபட்டால் விபத்து ஏற்பட்டதாகவும், மொபட்டை ஓட்டி வந்த 18 வயது கொத்தனார் மீது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments