தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வரும் நிலையில், கூடலூர் அருகே உள்ள பாடந்தொரை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதியை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தரைப்பாலம் மூழ்கியதால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
தொடர் மழையால் நீர்பிடிப்பு பகுதியான குந்தா அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு வரும் 300 கன அடி நீர் முழுவதும் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.
கனமழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தெப்பக்காடு தரைப்பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக அவலாஞ்சியில் 33.9 சென்டி மீட்டர் மழை பதிவான நிலையில் அவலாஞ்சி,லாரன்ஸ், எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
Comments